அரசாங்கத்தின் தோல்வி மக்களை இன்னல்படுத்துகின்றது - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் தோல்வி பொதுமக்கள் மேலும் இன்னல்களை எதிர்கொள்ள வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பு - எதுல் கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தவைலர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் விடயத்தினை தெரிவித்துள்ளார் தொடரந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போது அனைத்து துறைகளிலும் அரசாங்கம் தோல்வியுற்ற்றுள்ளது என கூறினார்.
தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆண்டு முழுவதும் நீடித்தால் எதிர்காலத்தில் பொது மக்களுக்கு மிகவும் கடுமையான பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அரசாங்கம் தனது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்து பொதுமக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும்அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.