நெருங்கும் அதிபர் தேர்தல்:கட்சி மாறும் படலம் ஆரம்பம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிராந்திய அமைப்பாளர்கள் மூவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa)வைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படும் மக்கள் மதில் வேலைத்திட்டத்தின் பொலன்னறுவை மாவட்டக் கூட்டம் இடம்பெற்ற போதே இவர்கள் இணைந்துகொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நந்தசேன ஹேரத் (Nandasena Herath) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளராகவும் இருந்த திலக் மஹெலேகம் (Thilak Mahalekam) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை நகர சபையின் வேட்பாளராக இருந்த சாந்த பண்டாரவும் (Shantha Bandara) சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்..
எதிர்வரும் ஒக்டோபரில் அதிபர் தேர்தல்களுக்குப் பிறகு உடனடியாகவே ஒரு பொதுத் தேர்தல் நடத்தப்படுமென்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல்வேறு தரப்பினரும் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |