பிரதமருக்கு நன்றி! விரைவில் வர்த்தமானி வெளியிட வேண்டும் - சபையில் முஜிபுர் கோரிக்கை
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிடவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், கடந்த 10 மாதங்களாக நாட்டில் இடம்பெற்றுவந்த பெரும் பிரச்சினை தான் கொவிட்டில் மரணிப்பவர்களை எரிப்பதற்கு மாத்திரம் அனுமதித்திருந்தது.
என்றாலும் கொரோனா மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவதாக பிரதமர் இந்த சபையில் அறிவித்திருந்தார்.
அதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவிக்கின்றேன். அதேபோன்று இந்த விடயத்தை வர்த்தமானியில் வெளியிட்டால் தான் அது சட்டமாக்கப்படும்.
அதனால் கொரோனா மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாம் என்ற வர்த்தமானி அறிவிப்பையும் விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.