தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள சம்பந்தனின் மறைவு : ஜனநாயகப் போராளிகள் கட்சி இரங்கல்

R. Sampanthan Sri Lanka Politician Sri Lanka
By Laksi Jul 02, 2024 11:12 AM GMT
Report

இரா.சம்பந்தனின் (R. Sampanthan) மறைவு தமிழ் தேசிய அரசியல் தளத்தில் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தனின் மறைவிற்கு வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சம்பந்தன் ஐயாவின் வெற்றிடத்தை நிரப்பிக்கொள்ள வேண்டிய காலக்கடமை தளத்தில் செயலாற்றுகின்ற அனைத்து தமிழ்தேசிய அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.

அனைவரும் ஓரணியில் திரளாக ஒன்றுபடுவதே நாம் அவரின் ஆன்மாவிற்கு செய்கின்ற உண்மையான அஞ்சலியாகும்.

தமிழரசுக் கட்சி ஒற்றுமையுடன் செயற்படுவதே அவருக்கான ஆழமான அஞ்சலி: சித்தார்த்தன் எம்.பி இரங்கல்

தமிழரசுக் கட்சி ஒற்றுமையுடன் செயற்படுவதே அவருக்கான ஆழமான அஞ்சலி: சித்தார்த்தன் எம்.பி இரங்கல்

இலங்கை இந்திய உடன்படிக்கை

இலங்கை இந்திய உடன்படிக்கையில் வடகிழக்கு இணைப்பின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் காத்திரமாக இந்திய பிரதமருக்கு வலியுறுத்தி அவ்விடயத்தினை ஒப்பந்தத்தில் இடம்பெற செய்த வரலாற்று கடமையினை ஆற்றியவர் இரா.சம்பந்தரே என்பது வரலாறு.

தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள சம்பந்தனின் மறைவு : ஜனநாயகப் போராளிகள் கட்சி இரங்கல் | Sampanthan Death Democratic Party Condolences

இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய கோரப்பட்ட இடைக்கால நிர்வாகத்திற்கு கூட்டணி சார்பில் இரா.சம்பந்தரே பிரேகரிக்கப்பட்டவராவார்.

2004 ஆம் ஆண்டு தமிழினத்தின் ஜனநாயக ஒற்றுமையினை கருத்திற்கொண்டு அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒன்றிணைத்து ஜனநாயக அரசியல் பலத்தினை மக்கள் ஆணைக்காக கொண்டுசெல்லும் செயற்பாடுகளில் தலைமையாக இரா.சம்பந்தர் சிறப்பாக செயலாற்றினார் என்பதனை யாரும் இலகுவில் மறந்துவிட முடியாது.

இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி

இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு மகிந்த அஞ்சலி

தேசிய இனப்பிரச்சினை

2009 ஆம் ஆண்டு போர் மௌனித்துப்போனதின் பின்னரான தமிழ் அரசியல் பரப்பில் 2015 இல் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தெரிவாகியமை அவரின் இராஜதந்திர நகர்வின் உச்சமாகவே கருதப்படுகிறது.

தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள சம்பந்தனின் மறைவு : ஜனநாயகப் போராளிகள் கட்சி இரங்கல் | Sampanthan Death Democratic Party Condolences

அந்தவகையில் இனத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக புதிய அரசியலமைப்பு பணிகள் சர்வதேச நாடுகளின் உடனான பேச்சுக்கள் குறிப்பாக இந்திய தரப்புக்களுடனான நகர்வுகளில் இரா.சம்பந்தர் ஆற்றிய பணிகள் என்றும் தமிழினத்தால் நினைவில் கொள்ளத்தக்கது.

இந்த நிலைமைகளில் இரா.சம்பந்தரின் மறைவு பெரும் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை தமிழ்தேசிய பரப்பில் உண்டாக்கி உள்ளதென்பதே உண்மையாகும்.

மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழினத்திற்கு பெரும் பின்னடைவு

தமிழினம் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வுமின்றி சமூக பொருளாதார அரசியல் பலம் சிதைவுகளுக்கு உள்ளாக்கப்பட்டு திக்கற்ற விதமான தமிழினத்தின் தற்போதைய நிலையில் இரா.சம்பந்தரது இழப்பு பேரிழப்பாகும்.

அதன் தாக்கமானது எதிர்கால தாயக பிராந்திய சர்வதேச அரசியல் விவகாரங்களை கையாளுகின்றபோது தமிழினத்திற்கு பெரும் பின்னடைவுகளை உருவாக்கும்.

தமிழ்த் தேசிய அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ள சம்பந்தனின் மறைவு : ஜனநாயகப் போராளிகள் கட்சி இரங்கல் | Sampanthan Death Democratic Party Condolences

இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒன்றிணைவதே இரா.சம்பந்தருக்கு நாம் ஆற்றுகின்ற அஞ்சலியாகும்.

அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கு எமது மக்களின் சார்பிலும் போராளிகள் சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்து கொள்கின்றோம்“ என்று தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி