ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார்! வைகோ இரங்கல்

R. Sampanthan Vaiko Death
By Shadhu Shanker Jul 02, 2024 05:58 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக இறுதி மூச்சு அடக்கும்வரை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், சர்வதேச அளவிலும் குரல் கொடுத்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் தன் 91 ஆம் வயதில் 30.06.2024 அன்று கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார் என்ற செய்தி அறிந்து ஆறாத் துயர் அடைந்தேன்.

1956 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியில் இணைந்த அவர், தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் திரிகோணமலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக 1977 ஆம் ஆண்டு இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

மறைந்த இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி : நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

தமிழர்களின் அரசியல் பிரதிநிதி

இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக இருப்பதைக் கண்டித்து, கருப்பு ஜூலை எனும் தமிழினப்படுகொலை நடந்த 1983 ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற அவைகளை புறக்கணித்தது. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து இரா.சம்பந்தன் விலக்கி வைக்கப்பட்டார்.

ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார்! வைகோ இரங்கல் | Sampanthan Passed Away Vaiko Condolence Message

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட போது, மீண்டும் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கைத் தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அப்போது வலியுறுத்தியது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர், இணைப் பொருளாளர் ஆகிய பொறுப்புகளில் இவர் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டில் இலங்கை தமிழர் கட்சி, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இவர் தலைமையில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 22 இடங்களை வென்றது.

 ஈழத்தமிழர் உரிமை

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக நாவலர் அ.அமிர்தலிங்கத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், அந்தக் காலகட்டத்தில் ஈழத்தமிழர் உரிமைக்காகவும், சிறுபான்மையினரான இசுலாமியர்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார்.

ஈழத் தமிழர் உரிமைக்காக இறுதிவரை குரல் கொடுத்தஇரா.சம்பந்தன் நம் நெஞ்சில் நிறைந்தார்! வைகோ இரங்கல் | Sampanthan Passed Away Vaiko Condolence Message

2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் துயரத்திற்குப் பின்னர், தமிழர் வாழும் பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும், ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் சிங்களவர்களின் அத்துமீறிய குடியேற்றம், சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் அவலம் என ஈழத்தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் சமஉரிமை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து இவர் குரல் கொடுத்தார்.

இரா.சம்பந்தன் அவர்களது மறைவு ஈழத்தமிழர்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் பரிதவிக்கும் அவருடைய தமிழரசு கட்சியினருக்கும், அவரது இல்லத்தினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

சம்பந்தன் ஐயாவின் இலட்சியம் கைகூட இதய சுத்தியோடு உழைப்போம்: கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரங்கல்

சம்பந்தன் ஐயாவின் இலட்சியம் கைகூட இதய சுத்தியோடு உழைப்போம்: கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரங்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024