இவர்கள்தான் குழப்பவாதிகள்! இரகசியத்தை போட்டுடைத்த சாணக்கியன்
வடக்கு கிழக்கு என நாம் பிரிந்திருக்க கூடாது இதுதான் என்னுடைய நிலைப்பாடு மக்களுக்காக சண்டைப்பிடிப்பதுதான் நான் மட்டக்களப்பில் செயலாளர் பதவிக்கு வருவதற்கு தடையாக இருக்கின்றதா? என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுக் குழு கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலளார் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு என நாம் பிரிந்திருக்க கூடாது இதுதான் என்னுடைய நிலைப்பாடு.
நாம் எவ்வித குழப்பமும் விளைவிக்கவில்லை சிலர் எம்மை தங்களது சுய இலாபத்துக்காக குழப்பவாதிகள் போல் காட்ட முனைகின்றார்கள்.
தங்களுடைய இயலாமைகளால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய செயலாளர் பதவியை இழந்து விட்டு இதற்கான பொறுப்பை இன்னொருவர் மேல் சுமத்துவது மோசமான செயலாகும். என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |