பிள்ளையானுக்கும் சாணக்கியனுக்கும் இடையே பெரும் தர்க்கம் - கூட்டத்தில் குழப்பநிலை (காணொளி)
Batticaloa
Pillayan
Srilankan Tamil News
By Kathirpriya
இன்றைய தினம் (25) மட்டக்களப்பு பிரதேசத்தில் நிகழ்ந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த போது நாடளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் காணொளி ஒன்றைக் காட்சிப்படுத்த அனுமதி கோரியுள்ளார்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டமையினால் அங்கே இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையே பெரும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாத வேளையில் சந்திரகாந்தன், சாணக்கியனைப் பார்த்து “போடா” என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசியதனால் சாணக்கியன் ஆவேசமடைந்துள்ளார்.
முழுமையான காணொளி