எதனை அழித்தாலும் எமது உரிமை - உணர்வு அழியாது! சாணக்கியன்
Police
Army
Jaffna
University of Jaffna
By Vasanth
எமது உரிமை - எமது உணர்வு, எதனை அழித்தாலும் அழியாதது என சாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், போர் வெற்றியை கொண்டாடும், பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் அதேவேளை இறுதி யுத்தத்தில் இறந்து போன எமது உறவுகளை நினைவு கூறும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
இதன்மூலம் அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர். இதில் கூட எமக்கான எமது மக்களுக்கான உரிமை இல்லையா?. ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமே இதற்கான காரணம் என தெரிவித்துள்ளார்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி