சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா விபத்தா! சர்ச்சையை கிளப்பிய பதிவு
Sri Lanka
Accident
Murder
Sanath Nishantha
By pavan
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி, விபத்து இடம்பெற்ற தினத்தன்று அவரது வாட்ஸ்அப்பில் பதிவிட்ட பதிவு ஒன்று தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதியான பிரபாத் எரங்க, 24 ஆம் திகதி தனது வட்ஸ்அப் கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார்.
பதிவில் குறிப்பிடப்பட்ட விடயம்
அந்த பதிவில் “நாளைய தினத்திற்குள், என பெயருக்கு கீழ் ஒரு அழகான புகைப்படமும் படத்திற்கு மேல் உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என கூறுங்கள்.நான் அதைப் படிக்க விரும்புகிறேன்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பதிவு தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இந்த பதிவானது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி