தேர்தலில் களமிறங்கிய அமைச்சருக்கு படுதோல்வி - பட்டாசுகளை வெடிக்கவைத்து மக்கள் கொண்டாட்டம்
ஆராச்சிக்கட்டு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த படுதோல்வி அடைந்துள்ளார்.
ஆராச்சிக்கட்டுவ பலநோக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாக்களிப்பு நேற்று (17) இடம்பெற்றதுடன் ஆராச்சிக்கட்டுவ பிரிவிற்கு 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு அமைச்சருக்கு 11வது இடம் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் 6 பேர் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்.
பட்டாசுகளை வெடிக்கவைத்து மக்கள் கொண்டாட்டம்

இராஜாங்க அமைச்சர் படுதோல்வி அடைந்ததால், அங்கு கூடியிருந்த மக்கள் அவருக்கு முன்பாக கூச்சலிட்டு, முழக்கமிட்டனர். மற்றொரு குழுவினர் பட்டாசுகளை வெடித்து ஆரவாரம் செய்தனர்.
மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சனத் நிஷாந்த மௌனமாக இருந்த போதிலும், அவரது சகோதரர் ஜகத் சமந்த ஆவேசமாக போராட்டக்காரர்களை திட்டித் தீர்த்தார்.
எனினும், ஜகத் சமந்தவும் அதே தேர்தலில் போட்டியிட்டு ஐந்தாவது இடத்தைப் பெற்று உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.