பிரித்தானியாவில் சாண்ட்விச் சாப்பிட்டதால் உயிரிழந்த நபர்: வெளியான காரணம்
பிரித்தானியாவில் (United Kingdom) , சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவில், ஜூன் மாதம் 25 ஆம் திகதி சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்போது, சாண்ட்விச்களில் பயன்படுத்தப்பட்ட லெட்டூஸ் இலைகள் மூலமாக பரவிய ஈ கோலை என்னும் கிருமியே பிரச்சினைக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என உணவு தரநிலை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிருமித் தொற்று
இந்தநிலையில், குறித்த நபர் லெட்டூஸ் இலைகள் மூலமாக பரவிய ஈ.கோலை கிருமித் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்தில் (England) , ஈ.கோலை கிருமித் தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் இரண்டு பேர் உயிரிழந்ததாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |