சாந்தன் மரணத்தில் சந்தேகம்: திடுக்கிடும் தகவல்களை கூறும் சட்டத்தரணி
சாந்தனின் மரணம் இயற்கையானது இல்லை என்றும் அது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உயிரிழப்பு தொடர்பில் எமது ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே இதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.
ஈழத்தமிழர்களுக்கான பாடம்
இது தொடர்பில் சட்டத்தரணி புகழேந்தி கூறுகையில் , ''ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும்.
அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது, உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது.
இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது."என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சாந்தனின் மரணத்தின் பின்னணி தொடர்பிலும், சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும், சட்டத்தரணி புகழேந்தி மேலும் தெரிவிக்கையில்..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |