பிரபல பாடகர்களுக்கு தொற்றியது கொரோனா
covid
colombo
popular singer
By Sumithiran
இலங்கையின் பிரபல பாடகர் சந்துஷ் வீரமன் மற்றும் பாடகி உமரியா சின்ஹவன்சா ஆகியோருக்கு கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக உமரியாவின் கணவரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக, பிஎன்எஸ் இசைக்குழு உறுப்பினர் பதியா ஜெயக்கொடியும் கொவிட் -19 தொற்றுக்கு இலக்காகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா கொவிட் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.