இந்திய உயர்ஸ்தானிகரும் சுமந்திரன் எம்பியும் கொழும்பில் விசேட சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் (Santhosh jha), இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று (12) கொழும்பில் (Colombo) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிபர் தேர்தல்
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி உட்பட்ட இரு தரப்பு இணைப்பு சம்பந்தமான பல தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
High Commissioner @santjha met Hon. MP @MASumanthiran today. Exchanged views on current political situation in Sri Lanka as well as various facets of bilateral partnership, including development in the Northern and Eastern Provinces of Sri Lanka. pic.twitter.com/JZa3POQDxA
— India in Sri Lanka (@IndiainSL) June 12, 2024
இலங்கையின் அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் ஒ க்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இவர்களின் சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |