சஜித் அணியின் நிலைமை: போட்டுத் தாக்கும் சரத்பொன்சேகா
சஜித்தின் (sajith premadasa)செயற்பாட்டுக்கு தலையாட்டுபவர்களே ஐக்கிய மக்கள் சக்தியில்(sjb) இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா(sarath fonseka) தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றியபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பெறப்போகும் வாக்குகள்
அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01 மில்லியன் வாக்குகளை மட்டுமே பெறும். இது முந்தைய தேர்தல்களில் பெற்ற வாக்குகளை விடக் குறைவாக இருக்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பல மூத்த உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர், இது கட்சிக்குள் அதிருப்தியைக் குறிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளியேறும் முக்கியஸ்தர்கள்
"முதலில்,குமார வெல்கம வெளியேறினார். பின்னர் சம்பிக, ராஜித, தலதா மற்றும் பொன்சேகா வெளியேறினர். இப்போது கட்சித் தலைவரின் ஒவ்வொரு முடிவுக்கும் தலையாட்டும் நபர்கள் மட்டுமே கட்சியில் எஞ்சியுள்ளனர்," என்று அவர் கூறினார்.
இதுபோன்றவர்களுடன் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான பயணத்தைத் தொடங்குவது கடினம் என்று சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

