சரிகமப சீனியர் 5 : நடுவர்களை உருக வைத்த சுவிஸ் வாழ் ஈழத் தமிழர் பிரஷான் (காணொளி)
ஈழத்திலிருந்து அகதியாக சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்த இளைஞர் ஒருவர் தனது திறமையினை வெளிக்காட்டி அரங்கத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் சீனியர் சீசன் 5க்கான மெகா ஒடிஷன் ப்ரொமோ காட்சி வெளியாகி தற்போது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக பாடல் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.
சரிகமப
இந்நிலையில் சரிகமப லிட்டில் சேம்ஸ் நிறைவடைந்த நிலையில், தற்போது சீனியர் சீசன் 5க்கான மெகா ஆடிசன் நடைபெற்றுள்ளது.
இதில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் வாழ் இளைஞர் பிரஷானும் கலந்துக்கொண்டுள்ளார்.
பிரஷான், இலங்கை குடியுரிமை இல்லாமலும், சுவிஸ் குடியுரிமை இல்லாமலும் 30 நாள் விசாவில் இந்தியா வந்து சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் பாடியிருப்பது அனைவரது மனதையும் உருகவைத்திருக்கிறது.
மேலும் முதன்முதலாக இந்த நிகழ்ச்சியில் பாடி நடுவர்களை உருகவைத்து கோல்டன் பசரையும் வாங்கியிருக்கிறார் பிரஷான்.
பிரஷான் குடும்பம்
பிரஷான் குடும்பம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து அகதியாக சுவிஷுக்கு சென்று இருக்கிறார்கள். இவருடைய வீட்டில் இவருக்கு மூன்று தம்பிகளும் இருக்கிறார்களாம்.
மொத்த குடும்பமும் இப்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்து வந்தாலும் அங்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. அதேபோல இலங்கையிலும் இவர்களுக்கு குடியுரிமை இல்லை. இதனால் தாங்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் பிரஷான் பேசும்போது, “தனக்கு தெரிந்தது இசை மட்டும் தான். என்னுடைய மனதில் பல கஷ்டங்கள் இருக்கும் போது நான் பாடலை மட்டும் தான் என் துணையாக கொண்டிருக்கிறேன் அந்த பாடலை நம்பி தான் நான் கடந்த வருடத்திலும் சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனில் கலந்து கொண்டேன்.
ஆனால் அதில் வெற்றி பெற்றாலும் என்னால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. அதேபோல இந்த சீசனிலும் நான் தெரிவு செய்யப்பட்டாலும் கூட என்னால் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாது.
காரணம் நான் 30 நாள் விசாவில்தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறேன். வரும் ஜூன் மூன்றாம் தேதி இந்தியாவை விட்டு நான் போய் ஆக வேண்டும் என்று கண்கலங்க பேசி இருந்தார்.
சரிகமப லிட்டல் சேம்ஸ் நிகழ்ச்சியின் இறுதி சுற்று கடந்த வாரம் நிறைவடைந்தது. இதில் வெற்றியாளராக திவினேஷ் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
