லங்கா சதொசவில் மீண்டும் குறைக்கப்பட்ட விலைகள்
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சகத்தின் அறிவுறுத்தலை அடுத்து நாளை வியாழக்கிழமை முதல் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின் கீழ், கோதுமை மாவின் விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ. 10 குறைக்கப்பட்டு, ரூ. 169-லிருந்து ரூ. 159-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மற்ற பொருட்களை விட மிக அதிகமான விலைக் குறைப்பாகும்.
அரிசி வகைகள் விலை குறைப்பு
பொன்னி சம்பா அரிசிக்கு ரூ. 6, சிவப்பு நாடு அரிசிக்கு ரூ. 5, சம்பா சிவப்பு அரிசிக்கு ரூ. 5, உள்ளூர் வெள்ளை நாடு அரிசிக்கு ரூ. 5, வெள்ளை சம்பா அரிசிக்கு ரூ. 5 மற்றும் வெள்ளை அரிசிக்கு ரூ. 3 என பல அரிசி வகைகளின் விலைகளும் ஒரு கிலோகிராமுக்கு குறைக்கப்பட்டுள்ளன.

மேலதிகமாக, கொண்டைக்கடலையின் விலையும் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 5 ஆகவும், வெள்ளைச் சீனியின் விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ. 2 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |