இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

Saudi Arabia Sivarasa Anojan
By Pavi Oct 08, 2026 05:58 AM GMT
Report

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது நபி தொடர்பில் அவமதிக்கும் வகையான விடயம் என கருதப்படும் கருத்தொன்றை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டதாகக் கூறி அனோஜன் கைது செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

களுத்துறை விபத்தில் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு

சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் 

முதலில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் திகதி சவூதி மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனையாக தண்டனையை அதிகரித்தது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை | Saudi Arabia Death Sri Lankan Migrant Worker

இந்நிலையில், கருத்து வெளியிட்டதற்காக ஒருவரை சிறையில் அடைப்பதும், மரண தண்டனை போன்ற தண்டனைக்கு உட்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகள் சென்று, சக கைதியொருவருடனான மோதலில் அவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறை அதிகாரிகளின் தகவலின்படி, அவருக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றொரு கைதியின் நகங்களால் ஏற்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அனோஜன் பின்னர் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை, மரண தண்டனைக்கு எதிராக சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபியா சென்றுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீட்டை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்காக இலங்கை மற்றும் சவூதி சட்ட ஆலோசகர்களுடன் இணைந்து தேவையான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது

அஹுங்கல்ல துப்பாக்கிச்சூடு: உடந்தையாக இருந்த சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தில் முளைக்கும் புதிய மதுபான நிலையங்கள் - வெடித்த போராட்டம்

யாழ்ப்பாணத்தில் முளைக்கும் புதிய மதுபான நிலையங்கள் - வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025