வெளிநாடொன்றில் ஒரே நாளில் எண்மருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் நேற்று தூக்கிலிடப்பட்டனர். மேலும், ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
230 பேருக்கு மரணதண்டனை
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர்.
2022ல் 19 பேருக்கும், 2023ல் 2 பேருக்கும், 2024ல் 117 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட மரணதண்டனை
சவுதி அரேபியா 2022ம் ஆண்டு இறுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தியது. இதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு இத்தகைய குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
