அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை

Sri Lankan Tamils Tamils Canada
By Bavan Oct 25, 2026 12:56 PM GMT
Report

இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு, அதற்கான திட்டம் இல்லாது இரு நாட்டு அரசுகளுடன் பேசாது ஒரு உத்தரவாதம் இன்றி மக்களிடம் பணம் வசூலித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எனவே இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை உடன் நிறுத்த வேண்டும் எனவும் வசூலித்த பணம் எவ்வளவு என உடன் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுருத்தியுள்ளார்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: பல்டியடிக்கும் சஜித்தரப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு: பல்டியடிக்கும் சஜித்தரப்பு

முகாம்களுக்கும் விஜயம் 

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று (24-10-2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

“இந்தியாவில் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழ் மக்களை மீள இலங்கைக்கு கொண்டு வருவதாக கனடாவில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு பணம் வசூலித்து வருவது தொடர்பாக சில சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றது.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை | Scam Targetting Lankan Tamil Refugees Probed

இது தொடர்பாக இந்தியா திருச்சி மற்றும் புலால் முகாம்களில் உள்ள மக்கள் தாங்கள் தாய் நாட்டுக்கு வரப்போகின்றோம் அதற்கான ஆயத்தங்கள் செய்து தருமாறு என்னுடன் தொடர்பு கொண்டு கோரியுள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் மாதம் இந்தியாவுக்கு குழு ஒன்றுடன் செல்லவுள்ளேன் அப்போது அனைத்து முகாம்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளேன்.

'முழு நாடும் ஒன்றாக' வேலைத்திட்டம்:108 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு

'முழு நாடும் ஒன்றாக' வேலைத்திட்டம்:108 பில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்பு

கனடியன் பேரவை 

இந்த நிலையில் கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பும் பாதயாத்திரையாக சென்று பணம் வசூலிக்கின்றனர் இது கனடாவில் மாத்திரம் அல்ல பல ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு பணம் வசூலித்து வருகின்றனர்

இந்த அமைப்புகள் பணம் வசூலிப்பதை பாராட்டுகின்றோம் இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களை மீளக் குடியமர்த்துவது நல்ல விஷயம் ஆனால் அதற்கான திட்டமிடல் இருக்கிறது அந்த திட்டத்தை வெளிப்படுத்தியதா ? இலங்கை அரசுடன் அல்லது இந்திய அரசுடன் பேசினார்களா ? யார் உத்தரவாதம் தந்தார்கள் ? இவைகள் எதுவும் இல்லாமல் எப்படி பணம் வசூலிப்பார்கள்.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை | Scam Targetting Lankan Tamil Refugees Probed

கடந்த காலத்தில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் போராட்டத்தை ஆதரித்து கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்து இன்று கடனாளியாக எத்தனையோ பேர் கடன் கட்ட முடியாது இரண்டு அல்லது மூன்று தொழில்களை செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

இவ்வாறான நிலையில் முதலாவது அந்த மக்கள் வர விரும்ப வேண்டும் அவர்களை கொண்டு வந்தால் அவர்களுக்கான காணி, வீடுகள், வாழ்வாதாரம் மற்றும் இருப்பிடத்தை உறுதிப்படுத்த வேண்டும் அத்தோடு அந்த புலம் பெயர்ந்த மக்களை மீளக் கொண்டு வந்து குடியேற்றுவதற்கான சட்டதிட்டம் நிறைய இருப்பதுடன் இவ்வாறு பல பிரச்சனை இருக்கிறது.

இவ்வாறான நிலையில் இரண்டு நாட்டு அரசாங்கங்களுடன் கலந்து உரையாடாமல் எவ்வாறு பணம் வசூலிப்பீர்கள் ? எனவே பணம் வசூலிப்பதை உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதுடன் கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் மாத்திரம் அல்ல ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும்.

படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச

படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச

புலம்பெயர் தேசம்

இந்த அகதிகளை மீளக் குடியேற்றுவது தொடர்பில் நாங்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் உட்பட ஒரு குழுவை ஏற்படுத்தி ஆலோசனைகளை பெற்று முன்னெடுத்துக் கொண்டு வருகிறோம் என்பதுடன் அடுத்த மாதம் என்னுடன் குழு ஒன்று இந்தியாவுக்கு பயணமாகிறது.

அங்கு அனைத்து அகதி முகாம்களுக்கு சென்று பார்வையிட்டு அவர்களின் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்ட பின்னர் இலங்கை அரசுடன் இந்திய அரசுடன் பேசமுடியும்.

அகதிகள் மறுவாழ்வு பெயரில் நிதி வசூல்: கனடியன் பேரவை - J.M.S அமைப்புக்களுக்கு எச்சரிக்கை | Scam Targetting Lankan Tamil Refugees Probed

எனவே இந்தியாவில் உள்ள அகதிகளை மீள கொண்டு வந்து குடியேற்றுவது தொடர்பாக எல்லோரும் ஒன்றிணைந்து செயற்பட கனடியன் பேரவை அமைப்பு மற்றும் ஜ.எம்.எஸ் என்ற அமைப்பு என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கை வாழ் மக்களின் இலங்கை கடவுச்சீட்டு காலாவதியான மற்றும் புதிய பாஸ் போட்டுக்களை பெறுவதற்காக அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு சென்று கடவுசீட்டை புதிப்பித்து பெற்றுக் கொள்ள குறைந்தது ஆறு மாதம் தொடக்கம் இரண்டு வருட காலம் நீடிக்கின்றனர்.

அது மட்டுமல்ல அதற்கான கட்டணங்கள் அதிகரிக்கின்றது இதனால் அவசர தேவைக்காக அந்த மக்கள் இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர் எனவே இந்த ஆட்சி காலத்தில் இப்படியான செயல்பாடு வரவேற்கதக்கது அல்ல” என தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் விபத்து : 10 வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

அநுராதபுரத்தில் விபத்து : 10 வயது சிறுமி ஸ்தலத்திலேயே உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026