புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி : பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய (harini amarasuriya) நேற்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தத் தேர்வுக்கான வெட்டுப் புள்ளிகள் தாமதமானதற்குக் காரணம் தேர்வுத் துறையின் தாமதம் அல்ல, மாறாகத் தேர்வு தொடர்பான நீதிமன்ற வழக்குதான் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் தாமதம்
புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் தாமதம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி தயாசிறி ஜயசேகர வாய்மொழியாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் தேர்வும் தமிழ் மொழியிலேயே நடைபெற்றது.
மீண்டும் தேர்வு நடத்தப்பட்டால், அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பிரதமர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
