யாழ் குடாநாட்டு மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
jaffna
school
closed
By Vanan
அடை மழை காரணமாக நாளையும்(10) யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ( K. Makesan) தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலையைத் தொடர்ந்து மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
பாடசாலைகளை திறப்பதற்கான மாற்று தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இன்றைய தினமும் (09) யாழ். மாவட்டத்தில் பாடசாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.