வடக்கில் சீரற்ற காலநிலை - 3 மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
school
closed
northern province
By Vanan
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (10) புதன்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் முன்வைத்த பரிந்துரைக்கமைய மாகாண ஆளுநரின் அனுமதியுடன் நாளைய தினம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.