பாடசாலை நேரத்தை அதிகரிப்பது தொடர்பில் புதிய தீர்மானம் - கல்வி அமைச்சு
school time
srilankan schools
education mnistry
new desicion
By Kanna
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
18 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் விடுமுறைகள் உள்ளிட்ட பாடசாலை அட்டவணைகள் அதிபர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலை நேரத்தை ஒரு மணித்திலாயம் வரை நீட்டிப்பதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான காலத்தையும் கூடுதலாக வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அடுத்த தவணை முதல் பாடசாலை நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்தால் நீடிக்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி