கொரோனா அச்சுறுத்தல் - கொழும்புப் பாடசாலை ஒன்றில் இடைநிறுத்தப்பட்ட வகுப்புக்கள்!
srilanka
colombo
school leave
By Vasanth
கொழும்பு, ஆனந்த கல்லூரியின் தரம் 7, 8 ஆகிய வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் ஆனந்த கல்லூரியின் சுமார் 70 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியரின் முதல் நிலை தொடர்புகளாக அடையாளம் காணப்பட்டு மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்