கஞ்சாவுடன் பிரபல பாடசாலை மாணவன் கைது
பதுளை – லுணுகலை பகுதியில் பிரபல பாடசாலையொன்றில் சாதாரணதரத்தில் கல்விகற்கும் 16 வயதுடைய மாணவன் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5,600 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
லுணுகலை – 27ஆம் கட்டை, அலகொலகம பகுதியை குறித்த மாணவன் வசிப்பிடமாக கொண்டுள்ளார்.
காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகம்
முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கி பாக்குத் தோட்டம் பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறைக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவரை மறித்துச் சோதனையிட்டபோதே அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின்போது, கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கஞ்சா விற்பனை தொடர்பில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான மாணவனை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |