வெள்ளத்தில் சிக்கிய பாடசாலை மாணவன் பரிதாப மரணம்
Kalutara
Sri Lanka Police Investigation
Floods In Sri Lanka
By Sathangani
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பாடசாலை மாணவரொருவர் நேற்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி அங்குருவத்தோட்ட (Anguruwathota) காவல்துறை பிரிவிற்குட்பட்ட நிவ்வெடல்வத்தை நெபொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.
காவல்துறையினர் விசாரணை
இந்த நிலையில், காணாமல் போன பாடசாலை மாணவரது சடலம் அங்குருவத்தோட்ட காவல்துறை பிரிவில் உள்ள உடுவர கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் சடலமானது ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பில் அங்குருவத்தோட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்