சடலமாக மீட்கப்பட்ட பாடசாலை மாணவன்: 4 மாதங்களுக்கு முன் உயிரிழந்த தந்தை
19 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட வன்னியார் வீதியில் உள்ள வீடொன்றிலேயே மாணவன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்
நான்கு மாதங்களுக்கு முன்னர் மாணவனின் தந்தை உயிரிழந்திருந்த நிலையில், குடும்பத்தினர் அந்த இழப்பிலிருந்து மீள்வதற்குள் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை
மரண விசாரணை
உயிரிழந்த மாணவனின் பெற்றோர் அரச உத்தியோகத்தர்கள் என்பதுடன், அவருக்கு இரு சகோதரிகளும் உள்ளனர்.

கல்முனை பிராந்திய உதவிப் காவல்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையக பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் முதற்கட்ட விசாரணைகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து சடலம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைத் தலைமையக காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |