பாடசாலை வாகன சேவைக் கட்டணம் குறைகிறது
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
எரிபொருள் விலை குறைப்புக் காரணமாக பாடசாலை வாகன சேவைக் கட்டணத்தையும் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் (AISVOA) தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.
டீசல் விலைகள் மொத்தமாக குறைக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, பாடசாலை வாகன சேவை மாதாந்தக் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இறுதி தீர்மானம்
எவ்வாறாயினும், கட்டணத் தொகையை மீளாய்வு செய்வது குறித்த தீர்மானம் குழுக் கூட்டத்தின் பின்னர் நாளை எடுக்கப்படும் என மல்சிறி டி சில்வா தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெற்றோர்கள் சோர்ந்து போயுள்ளதால், சமீபத்திய எரிபொருள் விலைக் குறைப்பின் பலனை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும், என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி