புத்தாண்டு கொண்டாட்டத்தில் இன்று நிகழ்ந்த துயரம் : கிரீஸ் மரத்திலிருந்து வீழ்ந்து மாணவன் உயிரிழப்பு
புத்தாண்டு(sinhala new year) கொண்டாட்டத்தின் போது கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் உயிரிழந்த துயர சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
எல்பிட்டிய பகுதியில் இன்று (17) புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கிறிஸ் மரத்தை தயார் செய்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் அதிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
துரதிஷ்டவசமான விபத்து
பிடிகல மற்றும் அமுகொடவில் உள்ள சிறி விஜயாராமய கோயில்களுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது இந்த துரதிஷ்டவசமான விபத்து நிகழ்ந்தது.
40 அடி உயரமான கிரீஸ் மரத்திலிருந்து விழுந்த பள்ளி மாணவன் எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பிடிகல காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றியவர்
இறந்த16 வயதுடைய பள்ளி மாணவர், இந்த ஆண்டு க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றியவராவார். அவர் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, முடிவுகளுக்காகக் காத்திருந்த ஒருவர் என்று கூறப்படுகிறது.
எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, பிடிகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
