இன்று மூடப்படவுள்ள பாடசாலைகள்!
மத்திய மாகாண நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் இன்று (25) மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய மாகாணத்தின் மற்ற கல்வி வலயங்களில் நிலவும் வானிலை நிலவரங்களின் அடிப்படையில் பாடசாலை நிலவரங்களை கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
மேலும், ஹட்டன் கல்வி வலயத்தில் நாளைய தினத்திற்கான பாடசாலை நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறொரு நாளில் பதில் பாடசாலை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய மாகாணத்திலுள்ள ஏனைய கல்வி வலயங்களில் பாடசாலைகளை நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானத்தை அந்ததந்த வலயங்களின் அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |