14 வயது சிறுவன் மீது பாலியல் அத்துமீறல்: சந்தேகநபர் தலைமறைவு
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவரை பாலியல் அத்துமீறல் செய்ய முயற்சித்த நபர் மீது காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் 60 வயது வயதுடைய மாமனாரே இவ்வாறு குற்றச்செயலில் ஈடுபட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
காவல்துறையினர் விசாரணை
“குறித்த சிறுவனின் தந்தையார் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருகின்றார்.

இந்நிலையில் தந்தையாரின் உறவினரான சிறுவனின் மாமா வீட்டிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.
அவர்களுக்கு மாதாந்தம் ஒருதொகை பணத்தை மாமனார் ஊடாக தந்தையார் அனுப்பி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த சிறுவன் கடந்த மாதம் 24 ம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமனார் சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த சிறுவன் தாயாரிடம் தெரிவித்ததையடுத்து கடந்த டிசம்பர் 30 ம் திகதி 1990 என்ன அவசர சேவைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில் குறித்த மாமனார் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர் ஒரு அரசியல்வாதி எனவும் அவரை கைது செய்ய தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |