பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் அலுவலகத்திற்கு வைக்கப்பட்டது சீல்!
Sri Lanka Police
Colombo
Public Utilities Commission of Sri Lanka
By Pakirathan
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் அலுவலகம் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகம் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பகுதியை சேர்ந்த சிலர் குறித்த அலுவலகத்தில் இருக்கும் முக்கிய ஆவணங்களை அழிக்க திட்டமிடுவதாக கொள்ளுப்பிட்டி காவல்துறைக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை வெளிப்படுத்தி பெற்றுக்கொண்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய, குறித்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஜனக ரத்நாயக்க தற்போது வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அவர் நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி