முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டினால் தொடருந்து நிலையத்தில் குழப்ப நிலை
சுற்றுலா பயணிகளுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த தொடருந்து பயணசீட்டுக்களுக்கான ஆசனங்களை வேறு பயணிகளுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பான காணொளியொன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (08.10.2025) பட்டிபொல தொடருந்து நிலையத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தொடருந்தில் ஆசனங்களை முன்பதிவு செய்த நபர் விளக்கமளித்துள்ளார்.
முன்பதிவில் மாஃபியா
மேலும் விளக்கமளித்த அவர், “நாங்கள் 12 பேர். 11 சுற்றுலாப் பயணிகள் உட்பட தொடருந்தில் செல்ல திட்டமிட்டோம்.
எங்களில் 9 பேர் ஹோட்டன் சமவெளிக்கு சென்றிருந்தோம். எனினும் எங்களுடன் 3 பேர் வர விரும்பவில்லை. எனவே நான் அவர்களுக்கு தொடருந்து இருக்கைகளுடன் கூடிய 2 பயணசீட்டுக்களை வழங்கினேன்.
சுற்றுலாப் பயணிகள் 3 பேர் நானுஓயாவிலிருந்து ஏறினார்கள். தொடருந்து பட்டிபொல நிலையத்திற்கு வந்தபோது, மீதமுள்ள ஆசன முன்பதிவுக்கமைய தொடருந்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பயணசீட்டுக்களை பெற்றேன்.
பின்னர் நான் பட்டிபொல நிலைய அதிகாரியிடம் பேசிய பின்னர் நாங்கள் தொடருந்தில் ஏறினோம். எங்கள் இருக்கைகளில் இருந்த பயணிகள் எழுந்து நின்று பயணம் செய்தனர்.
இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பயணிகள் நானுஓயாவிலிருந்து ஏறாததால், தொடருந்து நிலையத்தில் அவர்கள் முன்பதிவு செய்த இருக்கைகள் வேறொருவருக்கு வழங்கியுள்ளதாக தொடருந்து பொறுப்பதிகாரி காரணத்தை விளக்கியிருந்தமையும் காணொளியில் பதிவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
