இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை : அரச தரப்பு அறிவிப்பு

Sri Lanka United States of America Israel Iran
By Sathangani Mar 05, 2026 08:12 AM GMT
Report

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்துப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும், பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர்ச்சேதங்களைக் குறைக்கவும், பிராந்திய அமைதியைப் பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை அரசாங்கம் செய்து வருகின்றது என தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல்! சஜித் கேள்வி

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல்! சஜித் கேள்வி

சர்வதேச அமைதி

இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் விரிவான அறிக்கையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, "ஒரு நாடாக இலங்கை சர்வதேச அமைதிக்காகச் செயற்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் அமைதியே எமது எதிர்பார்ப்பாகும்.

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை : அரச தரப்பு அறிவிப்பு | Second Iranian Ship Not In Sri Lankan Waters

கூறப்பட்டதை விட அதிகமான விடயங்கள் தற்போது இந்தியப் பெருங்கடலில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் தலையிட்டு வருகின்றோம். பிராந்திய அமைதியைப் பாதுகாக்கத் தலையிடுகிறோம். மேலதிக தகவல்களைப் பின்னர் அறிவிப்போம்.

நாம் சர்வதேசச் சாசனங்களுக்கு அமைவாக, உயிர்ச் சேதங்களைக் குறைக்கும் வகையிலும், இந்தியப் பெருங்கடலில் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் பொறுப்புடன் செயற்படுகின்றோம். இன்று மாலை மேலதிக தகவல்களைக் கூற முடியும்.

ஈரான் விவகாரத்தில் ட்ரம்பைக் கட்டுப்படுத்தல் : செனட் சபையில் பிரேரணை தோல்வி

ஈரான் விவகாரத்தில் ட்ரம்பைக் கட்டுப்படுத்தல் : செனட் சபையில் பிரேரணை தோல்வி

 கடுமையான போர்ச் சூழல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான போர்ச் சூழல் உருவாகி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே, இவ்வாறானதொரு நேரத்தில் நாடாளுமன்றத்தையோ அல்லது ஊடகங்களையோ பயன்படுத்தி நகைச்சுவை செய்வதற்கோ, அரசியல் கோபங்களைத் தீர்த்துக்கொள்வதற்கோ, போலி அல்லது அரைகுறை உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ இது நேரமல்ல.

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை : அரச தரப்பு அறிவிப்பு | Second Iranian Ship Not In Sri Lankan Waters

உலகளாவிய ரீதியில் இவ்வாறானதொரு சூழ்நிலை நிலவும் போது, ஒவ்வொரு அரசியல்வாதியும், மக்கள் பிரதிநிதியும் மிகவும் பொறுப்புடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.

எமது கரையிலிருந்து 12 கடல் மைல்கள் வரையான தேசிய கடற்பரப்பு எமக்குச் சொந்தமானது. அந்த 12 முதல் 200 கடல் மைல்கள் வரை இருப்பது பிரத்தியேகப் பொருளாதார வலயம். இந்த வலயத்தில் சர்வதேச சட்டம் நடைமுறையில் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அங்கு எமக்கு அதிகாரம் உள்ளது, இராணுவ நடவடிக்கைகளுக்கு அல்ல.

இந்தச் சம்பவம் காலி துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. இது தொடர்பில் நேற்று அதிகாலை 5.08 மணிக்கே கடற்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு முதலில் தகவல் கிடைத்தது.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா! மறுக்கும் இந்தியா

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா! மறுக்கும் இந்தியா

மீட்புப் பணிகளை முன்னெடுத்தன

தாக்குதல் நடத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் அல்ல, அப்பகுதியில் சடலங்கள் மிதக்கின்றன என்ற தகவலே முதலில் கிடைத்தது. ஒரு மணி நேரத்திற்குள் இலங்கை கடற்படை மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தாக்குதல் குறித்துத் தேடுவதை விட, மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு உயிர்களைக் காப்பாற்றுவதே எமது நோக்கமாக இருந்தது.

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை : அரச தரப்பு அறிவிப்பு | Second Iranian Ship Not In Sri Lankan Waters

அதன்படி, அரசாங்கத்தின் தரப்பிலும், கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சும் மீட்புப் பணிகளை முன்னெடுத்தன. எங்களால் 32 பேரைக் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வர முடிந்தது. ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை 87 பேரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

எங்களிடம் உள்ள சடலங்களைப் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, தனியார்த் துறையிடம் இருந்து இதைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இன்னும் சில மணி நேரங்களில் கொழும்பில் இருந்து மேலதிகமாக இரண்டு குளிர்சாதனப் பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.” என தெரிவித்தார்.

இலங்கைக் கடலில் மற்றுமொரு ஈரானிய கப்பல்! Bushehr மீது திரும்பிய சர்வதேச கவனம்

இலங்கைக் கடலில் மற்றுமொரு ஈரானிய கப்பல்! Bushehr மீது திரும்பிய சர்வதேச கவனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026