ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Udaya Gammanpila Harshana Nanayakkara
By Sathangani Jun 12, 2025 12:03 PM GMT
Report

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பயன்படுத்தி முறையற்ற வகையில் கைதியொருவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்படாத கைதியொருவரை விடுதலை செய்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரியொருவரும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

சிறைச்சாலைகள் ஆணையாளர்

யார் தவறு செய்துள்ளார்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு செயற்பாடு தொடர்பில் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுமன்னிப்புக்கு உட்பட வேண்டிய கைதிகளின் பெயர் பட்டியலை அனுப்புமாறு ஜனாதிபதியின் செயலாளரினால் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை அமைச்சின் செயலாளர் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம் | Secretaries Of President And Justice Minis Arrest

அதன்பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர் அந்த கடிதத்தை சகல சிறைச்சாலைகளுக்கும் அனுப்பியுள்ளார். அதன்படி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டிய கைதிகள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அந்தப் பட்டியல் மீண்டும் ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக சகல சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

தையிட்டி விகாரையை காக்கும் காடையர்கள்...! தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

தையிட்டி விகாரையை காக்கும் காடையர்கள்...! தமிழ் மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து

நான்கு பேர் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் 

அப்படியாயின் சிறைக்கைதியொருவரின் பெயரை அந்த பட்டியலுக்குள் இரகசியமாக உள்ளடக்குவதென்றால் நான்கு பேர் அதில் சம்பந்தப்பட வேண்டும். ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர், சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சிறைச்சாலை பணிப்பாளர் ஆகியோராகும்.

இதில் சிறைச்சாலைகள் பணிப்பாளர் குறிப்பிட்ட பெயரை உள்ளடக்கியிருந்தால் அவரை கைது செய்யலாம். ஆனால் சிறைச்சாலைகள் ஆணையாளரும் இதில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம் | Secretaries Of President And Justice Minis Arrest

சிறைச்சாலைகள் ஆணையாளரே பெயரை உள்ளடக்கினார் என்றால் அவர் உள்ளே இருக்க, சிறைச்சாலை பணிப்பாளர் வெளியில் இருக்க வேண்டும். இருவரும் ஒரே நேரத்தில் சிறையில் இருக்க முடியாது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் இதில் தொடர்புபட்டிருந்தால் அவருக்கும் மேலுள்ள ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் பொறுப்பு கூற வேண்டும்.

இதன்படி சிறைச்சாலைகள் ஆணையாளரை கைது செய்வதென்றால் அதேபோன்று ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் கைது செய்யப்பட வேண்டும்.

கைதுகளால் அதிரும் சிறைச்சாலைகள் திணைக்களம் - தொடரும் பதவி விலகல்கள்

கைதுகளால் அதிரும் சிறைச்சாலைகள் திணைக்களம் - தொடரும் பதவி விலகல்கள்

  

 பொது மன்னிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தில் சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் முறை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் என்னை சந்தித்து தெளிவுபடுத்தினர்.

துஷார உபுல்தெனிய அரசியல்வாதிகளுக்காக சோரம் போகாத நேர்மையான அதிகாரியாவார். அவரை நீக்கி தமக்கு ஆதரவான ஒருவரை நியமிப்பதற்கான வழியையே அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர், நீதி அமைச்சின் செயலாளர் கைது : தொடரும் அழுத்தம் | Secretaries Of President And Justice Minis Arrest

இதற்காக அவரை கட்டாய விடுமுறையில் அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் முறையான அடிப்படை விசாரணைகளை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்காது அவரை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற தீர்மானமாகும்.

இதனால் அவர் நீதிமன்றத்தில் அதனை சவாலுக்கு உட்படுத்தினால் அரசாங்கம் நெருக்கடிக்கு ஆளாகும். ஜனாதிபதிக்கும் தெரியாது திருட்டுத்தனமாக பொதுமன்னிப்பை எவராவது வழங்குவதாக இருந்தால், அதனூடாக அரச பொறிமுறை ஜனாதிபதியிடம் இருந்து மீறிப்போயுள்ளது என்றே அர்த்தப்படுகின்றது“ என தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: வெடிக்க உள்ள போராட்டம் - அரசுக்கு கடும் எச்சரிக்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பு: வெடிக்க உள்ள போராட்டம் - அரசுக்கு கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016