மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய செயலாளராக (Ministry of Women and Child Affairs) கே.டி.ஆர் ஒல்கா (K.D.R. Olga) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க (Nandika Sanath Kumanayake) இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கே.டி.ஆர். ஒல்காவிற்கு கையளித்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்பு
இதேவேளை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் (Saroja Savithri Paulraj) கடந்த 18ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்டு சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
அத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சராக நாமல் சுதர்சன (Namal Sudarshana) கடந்த 21ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |