பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை : காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் களுத்துறை வடக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பலர் மேற்கொண்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட வேளை குறித்த சந்தேகநபர் 06 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 1080 போதை மாத்திரைகள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 13 மணி நேரம் முன்