இது எமது கொள்கையல்ல : அரசை கடுமையாக சாடிய நாமல்
அரச சொத்துக்கள் மறுசீரமைக்கப்பட்டாலோ அல்லது விற்பனை செய்யப்பட்டாலோ, அதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ அந்த அரச நிறுவனங்களை என்ன செய்ய போகிறார்கள் என்பதை உடனடியாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலைய ஹில்டன் ஹோட்டலை இவ்வாறு புனரமைக்க வேண்டுமாயின் அதில் முதலீடு செய்ய வந்தவர்கள் அந்த நிறுவனங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறை என்ன, தீர்மானம் எடுத்தவர்கள் என்ன கருதினார்கள் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிப்படைத்தன்மை
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக இருந்தால் பொருத்தமான நிறுவனங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ வழங்கப்பட வேண்டுமெனவும், அவை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
இது எமது கொள்கையல்ல
வெளிப்படைத்தன்மை இல்லாத அவசர ஒப்பந்தங்களுக்கு தாம் எதிரானவர் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிறுவனங்களை விற்பது தனது மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |