குடிவரவு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் அதிரடி கைது!
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள சென்னையில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்துடன், வேறொரு நபரின் தரவுகளை உள்ளடக்கிய விண்ணப்பத்தை முறையான பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு, வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்க உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல்
குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குத் தொடர்பான நீதவானின் உத்தரவுக்கமைய காவல்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்... இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |