செந்தில் பாலாஜிக்கு அடுத்த தலையிடி - தம்பி கட்டும் வீட்டிற்குள் புகுந்த அமலாக்கத்துறை
சென்னை கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மனைவியின் பெயரில் கட்டி வரும் பிரம்மாண்டமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தனது துறையில் பணி நியமனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட மிகப்பெரும் வீட்டிற்கு வந்த அமுலாக்கதுறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கியுள்ளனர்.
அமலாக்கத்துறை விசாரணை

இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையை தொடங்கினர்.
அப்போது கட்டுமான பணி நடைபெறும் சுற்றுச்சுவரின் கதவில் அசோக் குமார் நேரில் முன்னிலையாக வேண்டும் என்று முதன்முறையாக சம்மன் ஒட்டி இருந்தனர்.
எனினும் அசோக் குமார் முன்னிலையாகாததால் அவரது வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தநிலையில், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனையை தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.