உள்துறை அமைச்சர் அமித் ஷா - செந்தில் சந்திப்பு: இலங்கை வருமாறு அழைப்பு
Amit Shah
Senthil Thondaman
India
World
By Thulsi
இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) மற்றும் அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman ) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு விஜயவாடாவில் நேற்று (13.4.2024) இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மத்திய உள்துறை அமைச்சரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி
அண்மையில் நடைபெற்று முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு செந்தில் தொண்டமான் இதன்போது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தொடர்ந்து வழங்கிவரும் உதவிகளுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் பெருந்தோட்ட சமூகத்தின் 200 ஆவது ஆண்டு நினைவு முத்திரையையும் செந்தில் தொண்டமானால் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்