சுமார் 10 மாதங்களுக்குப் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள சேவை
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் சூழ்நிலையை அடுத்து கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் மீண்டும் முதல் தடவையாக இன்று தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி மற்றும் பதுளை வரையிலான ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்படுகிறது.
வடமாகாணத்திற்கான ரயில் சேவை கல்கிசை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களிலிருந்து காங்கேசன்துறை வரை செல்ல உள்ளதுடன் கிழக்கு மாகாணத்திற்கு மட்டக்களப்பு வரையிலான ரயில் சேவை மற்றும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வரையிலான ரயில் சேவையும் இடம்பெறும்.
தென் பகுதிக்கான ரயில்சேவை கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்தை வரை இடம்பெறும் என ரயில்வே திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.