அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்தது விமானம் : பலர் பலி
United States of America
Plane Crash
By Sumithiran
அமெரிக்காவில் வீட்டின் மீது சிறிய ரக விமானம் விழுந்ததால் பலர்பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த மாகாணத்தில் அமைந்திருக்கும் மொபைல் ஹோம் பார்க்கில் நேற்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விரைவாக அணைக்கப்பட்ட தீ
வீட்டின் மீது விமானம் விழுந்ததில் மூன்று வீடுகள் தீக்கு இரையாகின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக அணைத்தனர்.
பலர் உயிரிழப்பு
இந்த விபத்தில், எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற விபரம் வெளிவரவில்லை. என்றாலும் விமானம் விழுந்த வீட்டிலும், விபத்தில் சிக்கிய விமானத்திலும் பலர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி