சிறுவர்களின் தவறான படங்களை பகிர்ந்த நபர் : காவல்துறையினர் அதிரடி
ராகம (Ragama) பகுதியில், சிறுவர்களின் தவறான படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் ராகம, கெண்தலியத்தபாலுவ பகுதியில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
முகப்புத்தகம் மூலம் விநியோகம்
சிறுவர்களின் தவறான படங்கள் அடங்கிய காணொளிகள் மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் வழியாக வெளிநாட்டினருக்கு விநியோகித்த ஒரு நபர் குறித்து சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்து, சந்தேக நபருக்குச் சொந்தமான தொலைபேசி பதிவைப் பெற்று, நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் சந்தேக நபரிடமிருந்து ஒரு தொலைபேசி மற்றும் ஆபாச படங்கள் அடங்கிய கணனியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
