மற்றுமொரு பிரபல கிரிக்கெட் வீரரும் ஓய்வை அறிவித்தார்.
அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர் வோனர் அண்மையில் தனது ஓய்வை அறிவித்த நிலையில் மற்றுமொரு வீரரும் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளமை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஷோன் மார்ஷ், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவிப்பு
ஷோன் மார்ஷ், இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 73 ஒரு நாள் போட்டிகள், 15 ரி 20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்காக விளையாடியுள்ளார். டெஸ்டில் 2,265 ஓட்டங்கள், ஒருநாள் போட்டிகளில் 2,073 ஓட்டங்கள், ரி 20 போட்டிகளில் 255 ஓட்டங்கள் என மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில் 5,293 ஓட்டங்களை குவித்துள்ளார்.
2017-18ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி வெற்றிக்கு வழி வகுத்தார்.
முதல் தர போட்டிகளில் இருந்தும் ஓய்வு
இதே போல இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் 616 ஓட்டங்களை குவித்து ஒரஞ்சு தொப்பியை வென்றிருந்தார். பின்னர் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியில் சிறுது காலம் விளையாடினார்.
தற்போது 40 வயதாகும் ஷோன் மார்ஷ்,அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் மெல்போன் ரெனகேட்ஸ் அணி சார்பில் விளையாடி வருகிறார். இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |