நிதி இராஜாங்க அமைச்சருக்கு கொலை மிரட்டல்: விசாரணைகள் தீவிரம்
சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு (Asanka Shehan Semasinghe) எதிராக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகளை கோட்டை காவல்நிலையம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) பிற்பகல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும் தேர்தலுக்கு முன்வர அனுமதிக்கப் போவதில்லை எனவும், தனது அச்சுறுத்தலை புறக்கணித்தால் கொலை செய்துவிடுவேன் எனவும் தொலைபேசியில் அச்சுறுத்திய நபர் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
இதன்படி, இராஜாங்க அமைச்சரின் முறைப்பாட்டின் அடிப்படையில் கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஹம்பரண பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஷெஹான் சேமசிங்க, முதலில் அதிபர் தேர்தலை நடத்திவிட்டு பின்னர் எஞ்சிய தேர்தல்கள் நடத்தப்படும் என அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |