அமெரிக்க வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை தேர்தல் ஆட்டம் காணச் செய்துள்ளது:சர்தார் ஷெகார்ச்சி
கடந்த வாரம் நடந்து முடிந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி அடைந்த படுதோல்வி, ஈரானைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா தோல்வியடைந்ததன் நேரடி விளைவே என்று ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் சர்தார் ஷெகார்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"ஜனாதிபதி ட்ரம்பின் பின்னடைவு ஒரு உள்நாட்டு அரசியல் மாற்றத்தை விட மேலானது. அது 'ஈரானின் மன உறுதியை உடைப்பதில் அமெரிக்கா தோல்வியடைந்த ஒரு பெரும் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.
அமெரிக்கா பலியாகியுள்ளது
வெள்ளை மாளிகையின் அதிகாரத்தின் அடித்தளங்களையே ஆட்டம் காணச் செய்துள்ள, போர்க்களத்தில் ஏற்பட்ட மூலோபாயச் சிதைவு மற்றும் தோல்விகளுக்கு அமெரிக்கா பலியாகியுள்ளது.

"உலகளாவிய அதிகாரப் போட்டி எப்போதும் மேலாதிக்க சக்திகளுக்குச் சாதகமாக இருப்பதில்லை என்பதை இந்த வியூகத் தோல்வி நிரூபிக்கிறது” என்று ஷெகார்ச்சி கூறியதாக ஈரான் ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்: தெனியாய பகுதியில் நீரில் மூழ்கி மாயமான நால்வரில் இருவர் சடலங்களாக மீட்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |