கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஷிரந்தி
புதிய இணைப்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் ஷிரந்தி ராஜபக்ச முன்பிணை கோரியிருந்த நிலையில், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்திருந்தது. இந்நிலையில் தற்போது அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச தாக்கல் செய்திருந்த முன்பிணை மனுவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

'சிறிலியா சவிய' கணக்கு தொடர்பான விவகாரத்தில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் அவர் இந்த முன்பிணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
கடந்த 06ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது குறித்து நீதிமன்றத்தில் முன்னிலையாகி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (12) ஷிரந்தியின் முன்பிணை மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |