கழுத்து அறுத்து சிறுமி படுகொலை : காவல்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
எல்பிட்டிய காவல்துறை பிரிவில் தேயிலை தோட்டமொன்றில் இருந்து கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 17 வயதே ஆன சிறுமியின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சிறுமி தல்கஹாவத்தை, கரந்தெனிய பிரதேசத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்ததாகவும், தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சகோதரியின் கணவருடன் ஒன்றாக வசித்து
உயிரிழந்தவரும் சந்தேகநபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சிறுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது
முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.

சிறுமியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
23 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        